Mayotte : பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!
19 மார்கழி 2024 வியாழன் 07:41 | பார்வைகள் : 16738
Mayotte தீவில் ஏற்பட்ட Chido புயலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று டிசம்பர் 18 ஆம் திகதி புதன்கிழமை மாலை வெளியான தகவல்களின் படி 31 பேர் பலியாகியும், 1,373 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 45 பேர் உயிருக்கு போராடும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவரது விமானத்தில் Mayotte நோக்கி பயணித்துள்ளார். ஐரோப்பிய கூட்டத்துக்கு Brussels சென்றிருந்த ஜனாதிபதி மக்ரோன், அங்கிருந்து இரவு 10.30 மணி அளவில் Mayotte இற்கு புறப்பட்டார். இன்று காலை 10.30 மணிக்கு அவர் அங்கு சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan