Paristamil Navigation Paristamil advert login

உகண்டாவில் மர்ம காச்சல் - 300 பேர் பாதிப்பு

உகண்டாவில் மர்ம காச்சல் - 300 பேர் பாதிப்பு

18 மார்கழி 2024 புதன் 10:19 | பார்வைகள் : 4758


உகண்டா புண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இம்மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பது கூட கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் இந்நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

சிகிச்சையினால் பாதிக்கப்பட்டோர் ஒரு வார காலத்திற்குள் குணமடைந்து விடுவதாகவும். 

புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் இந்நோய் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்நோயிக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்நோய் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்