Saint-Ouen : உணவகத்துக்குள் பாய்ந்த பேருந்து... இருவர் காயம்!
18 மார்கழி 2024 புதன் 10:00 | பார்வைகள் : 7030
Saint-Ouen (Seine-Saint-Denis) நகரில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் பேருந்து பாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று டிசம்பர் 17 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள Bouillon du Coq உணவகத்துக்குள் நுழைந்துள்ளது. உணவகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து பேருந்தின் முன்பகுதி உள்ளே நுழைந்துள்ளது.
இச்சம்பவத்தில் இருவர் இலேசான காயங்களுக்கு உள்ளாகினர். RATP இற்கு சொந்தமான குறித்த பேருந்து, மீட்கப்பட்டு, திருத்தகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
பேருந்து கட்டுப்பாடை இழந்தது ஏன் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan