Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்குக் கோரிக்கை

இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்குக் கோரிக்கை

18 மார்கழி 2024 புதன் 05:39 | பார்வைகள் : 2931


இஸ்ரேல் நாடானது ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடருவோம் எனதெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பாலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பி.பி.சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரும் குறித்த பேச்சுவார்த்தை முன்னோக்கி செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த வாரங்களில், அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தங்களது மத்தியஸ்த செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்