கருங்கடலில் இரண்டாகப் பிளந்த ரஷ்ய எண்ணெய்க் கப்பல்
17 மார்கழி 2024 செவ்வாய் 07:09 | பார்வைகள் : 9924
கருங்கடலில் ரஷ்ய எண்ணெய்க் கப்பல் (Volkoneft 212) இரண்டாகப் பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கி உள்ளது.
29 பணியாளர்களுடன் சென்ற 2 ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றிலிருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15-12-2024 ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையான புயலின் போது 15 ஊழியர்களுடன் ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் எண்ணெய்யை ஏற்றிச் சென்றபோது இரண்டாக பிளந்துள்ளது.
இந்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாவது டேங்கர் கப்பலும் (Volkoneft 239) புயலால் சேதம் அடைந்து அதே பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான கப்பலை, இழுவைப் படகுகள், உலங்கு வானூர்திகள் மற்றும் 50ற்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பாவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan