தாய்லாந்து வருடாந்த திருவிழாவில் குண்டு வெடிப்பு
16 மார்கழி 2024 திங்கள் 05:57 | பார்வைகள் : 7160
தாய்லாந்தில்(Thailand) திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பு இடம்பெறற்றுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் நகரில் வருடாந்த திருவிழா நடைபெற்றது. இதன்போது விழாவில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த சிலர் அந்த கூட்டத்தை நோக்கி வெடிகுண்டு வீசியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan