Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

2025 : மிஸ் பிரான்ஸ் முடிவுகள்!!

2025 : மிஸ் பிரான்ஸ் முடிவுகள்!!

15 மார்கழி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 13672


2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியான Angélique Angarni-Filopon என்பவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். Martinique மாவட்டத்தின் அழகியாக வெற்றிபெற்ற அவர், தற்போது நாடளாவிய ரீதியிலான போட்டியில் வென்றுள்ளார்.

மிஸ் பிரான்ஸ் 2025 அழகிப்போட்டிக்கான இறுதிச் சுற்று டிசம்பர் 14, நேற்று சனிக்கிழமை Poitiers நகரில் உள்ள Futuroscope அரங்கில் இடம்பெற்றது. இம்முறை வயது வரம்புகள் எதுவும் இல்லாமல் போட்டி இடம்பெற்றது. இதில் 34 வயதுடைய Angélique Angarni-Filopon வெற்றி பெற்றார்.

”உங்கள் முன்னாள் நிற்பது ஒரு மரியாதை. மிஸ் Martinique போட்டியில் வெற்றிபெற்றபோது, நான் அதை ஒன்றாக செய்யப்போகிறேன் என Martinique மக்களிடன் தெரிவித்திருந்தேன். அதை ஒன்றாக இணைந்தே செய்தோம்!” என Angélique Angarni-Filopon தெரிவித்தார்.

இரண்டாவது இடத்தினை நோர்-பா-து-கலே மாவட்ட அழகியான Sabah Aib (Miss Nord-pas-de-Calais) பெற்றுக்கொண்டார்.

மூன்றாவது இடத்தினை மிஸ் Corse, Stella Vangioni பெற்றுக்கொண்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்