விசேட செய்தி : அகதிகள் முகாமில் துப்பாக்கிச்சூடு.... நால்வர் பலி!!
14 மார்கழி 2024 சனி 18:53 | பார்வைகள் : 8441
Dunkerque மாவட்டத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலியாகியுள்ளனர்.
இன்று டிசம்பர் 14 ஆம் திகதி இச்சம்பவம் Loon-Plage எனும் சிறு நகர்ப்பகுதியில் உள்ள அகதி முகாமுக்கு அருகே மாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. அகதி ஒருவர் ஆயுதத்துடன் வந்து அங்கிருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் அகதிகள் இருவரும், பாதுகாவலர்கள் இருவரும் என மொத்தம் நால்வர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்குரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆயுததாரி முன்னதாக ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் எனவும், அவரே தற்போது இந்த நான்கு கொலைகளையும் மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan