ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி
14 மார்கழி 2024 சனி 03:55 | பார்வைகள் : 4911
ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லமொன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பாரிய தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் தலைநகரான அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லமொன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த முதியோர் இல்லத்தில் சுமார் 111 முதியவர்கள் வசித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இல்லத்தின் முதல் தளத்திலேயே திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 55 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலை கவலைகிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீவிபத்துக்கான காரணம் இது வரை வெளிவராத நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan