Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காதலர் ஆண்டனியை மணந்தார் கீர்த்தி சுரேஷ்

காதலர் ஆண்டனியை மணந்தார் கீர்த்தி சுரேஷ்

12 மார்கழி 2024 வியாழன் 10:27 | பார்வைகள் : 9164


தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது ‛பேபி ஜான்' படம் மூலம் ஹிந்தியிலும் நுழைந்துள்ளார். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் நீண்டகாலமாக தனது பள்ளி காலம் முதல் நண்பராக இருந்து வரும் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷூம் காதலை உறுதி செய்தார். திருமணம் கோவாவில் நடப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கோவாவில் இவர்களின் திருமணம் கோலாகலமாக இன்று(டிச., 12) மணியளவில் நடந்தது. இந்து முறைப்படி நடந்த திருமண போட்டோக்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். அப்பாவின் மடியில் கீர்த்தி சுரேஷ் அமர்ந்திருக்க, கீர்த்தியின் கழுத்தில் காலை 9:40 மணிக்கு ஆண்டனி தாலி கட்டினார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளார். பட்டு, வேஷ்டி சட்டையில் விஜய் இருக்கும் போட்டோ வைரலானது. பைரவா, சர்கார் ஆகிய இரு படங்களில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்