Paristamil Navigation Paristamil advert login

எழுத்து

எழுத்து

11 மார்கழி 2024 புதன் 13:00 | பார்வைகள் : 2407


மனச்சுமை தாங்கும்
சுமை தாங்கி..
படைத்தது கவிதையாய்
இல்லாவிடினும் சரிதான்...
மனக்குமுறல்கள் யாவும்
காகிதக்கப்பல் ஏறட்டும்...
சுமையாவும் இறங்கக்
காண்போம்...

சுற்றத்தார் கிறுக்கன் என்று
தூற்றக் கூடும்...
உற்றத்தார் வீண் விரயமென்று
இகழக் கூடும்...
இறைவன் இருசெவி அளித்ததன்
பொருள் அறியும் நேரமிது....
வலப்புறம் வாங்கி இடப்புறம்
வெளியேற்றும் கலைகற்போம்...

இறக்கியமனக் குமுறல்களுக்கு பின்
இறகுபோல் உணர்வோம்...
அனுபவப்பட்ட அதிசயமிது
ரகசியமாக வைத்திருங்கள்...
ஆனால் அனுபவத்தில் உணர
மறுக்க வேண்டாம்...
நிச்சயம் இதயசுமை யாவும்
நீங்கக் காண்பீர்கள்...

"எழுத்து" ஓர் அற்புதமான
சுமைதாங்கி

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்