போலந்து பயணமாகிறார் மக்ரோன்! - பிரதமர் அறிவிப்பு எப்போது..??!!
11 மார்கழி 2024 புதன் 08:42 | பார்வைகள் : 7007
நாட்டின் புதிய பிரதமரை அறிவிப்புக்காக காத்திருக்கும் இந்நேரத்தில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் போலந்துக்கு பயணமாக உள்ளார்.
நாளை டிசம்பர் 12, வியாழக்கிழமை அவர் போலந்துக்கு பயணமாக உள்ளதாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது. போலந்தில் உக்ரேனுக்கு ஆதரவான மாநாடு ஒன்று இடம்பெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க மக்ரோன் பயணிக்க உள்ளார்.
கடந்த சனிக்கிழமை பரிசில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky இனைச் சந்தித்து உரையாடினார். அதை அடுத்து இந்த பயணம் இடம்பெற உள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி மக்ரோன், அடுத்த 48 மணிநேரத்தில் நாட்டின் புதிய பிரதமரை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளைக் காலைக்குள் (வியாழக்கிழமை) புதிய பிரதமர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan