இலங்கையில் அறிமுகமாகும் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்
10 மார்கழி 2024 செவ்வாய் 12:39 | பார்வைகள் : 8520
தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு (Driving Licenses) பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.
தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பத்தின்படி, தற்போது உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான பொருத்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கும்.
இதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan