இந்தியாவுக்கு எதிராக சதமடித்த அவுஸ்திரேலிய வீரர் - கைக்குழந்தையுடன் வாழ்த்திய மனைவி
7 மார்கழி 2024 சனி 14:06 | பார்வைகள் : 3597
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார்.
அடிலெய்டில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தது.
மார்னஸ் லபுஷேன் 64 ஓட்டங்கள் எடுத்து நிதிஷ் ரெட்டி ஓவரில் அவுட் ஆனார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 9 ஓட்டங்களில் வெளியேற, டிராவிஸ் ஹெட் (Travis Head) அதிரடியில் மிரட்டினார்.
சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட அவர், டெஸ்டில் தனது 8வது சதத்தினை பதிவு செய்தார்.
அப்போது பார்வையாளர் பகுதியில் நின்றிருந்த அவரது மனைவி, கைக்குழந்தையுடன் தனது கணவருக்கு வாழ்த்து கூறினார்.
ஹெட்டும் தனது பேட்டினை தாலாட்டுவது செய்து குழந்தைக்கு சதத்தை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சதத்திற்கு பிறகும் அதிரடி காட்டிய ஹெட் 141 பந்துகளில் 140 ஓட்டங்கள் எடுத்தபோது கிளீன் போல்டு ஆனார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 17 பவுண்டரிகள் அடங்கும்.

























Bons Plans
Annuaire
Scan