அவுஸ்திரேலியாவில் யூதவழிபாட்டுதலத்தின் மீது தாக்குதல்

6 மார்கழி 2024 வெள்ளி 13:21 | பார்வைகள் : 3292
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டுதலத்திற்கு இனந்தெரியாதவர்கள் தீவைத்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது , தீயணைப்பு வீராகள் அந்த பகுதிக்கு சென்றவேளை யூதர்களின் வழிபாட்டுதலம் முற்றாக எரியுண்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
அதிகாலைவேளையில் வழிபாட்டிற்காக சிலர் யூதவழிபாட்டுத்தலத்திற்குள் காணப்பட்டவேளை அது தீமூட்டப்பட்டது என சமூக தலைவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர் இதன் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார்.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட வன்முறை என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது சமூகத்தில் பகைமை உணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.