இலங்கையில் அரிசி, தேங்காய் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை

6 மார்கழி 2024 வெள்ளி 05:06 | பார்வைகள் : 4553
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை துறைமுகத்தில் இறக்கி 04 மணித்தியாலங்களுக்குள் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விரைவில் சந்தைக்கு வெளியிட வேண்டியதன் அவசியத்தின் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
இதேவேளை, சந்தையில் தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025