Paristamil Navigation Paristamil advert login

பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் Michel Barnier..!!

பதவி விலகல் கடிதத்தை கையளித்தார்  Michel Barnier..!!

5 மார்கழி 2024 வியாழன் 15:59 | பார்வைகள் : 1660


பிரதமர் Michel Barnier தனது பதவி விலகல் கடிதத்தை இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

நேற்று புதன்கிழமை மாலை அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இன்று காலை எலிசே மாளிகைக்குச் சென்ற Barnier, அங்கு வைத்து அவரது பதவி விலகல் கடிதத்தை கையளித்தார். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் ஜனாதிபதி மக்ரோனுடன் அவர் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அனைத்து பொறுப்புக்களையும் அவரே மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்,  நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மிக விரைவாக புதிய பிரதமரை அவர் நியமிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.