ஜனாதிபதி உரையாற்றுகிறார்!!

5 மார்கழி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 7341
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று நவம்பர் 5, வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மக்ரோன், நேற்று புதன்கிழமை மாலை நாடு திரும்பியிருந்தார். அடுத்த ஒருமணிநேரத்தில் அவரது Michel Barnier தலைமையிலான அரசாங்கம் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றின்மூலம் கவிழ்க்கப்பட்டது. பிரான்சில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் அரசாங்கம் ஒன்று கவிழ்க்கப்படுவது 1962 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெறுகிறது.
இந்நிலையில், புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ள ஜனாதிபதி, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தொலைக்காட்சிகள், சமூகவலைத்தளங்களில் இதனை நேரடியாக பார்வையிடமுடியும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1