Paristamil Navigation Paristamil advert login

Neuilly-sur-Seine : உதைபந்தாட்ட வீரரின் வீட்டில் கொள்ளை!!

Neuilly-sur-Seine : உதைபந்தாட்ட வீரரின்  வீட்டில் கொள்ளை!!

4 மார்கழி 2024 புதன் 11:50 | பார்வைகள் : 9370


அர்ஜண்டினாவின் முன்னாள் உதைபந்தாட்ட வீரரும், PSG கழக வீரருமான Ezequiel Lavezzi இன் வீடு கொள்ளையிடப்பட்டுள்ளது. புறநகர் பரிசான Neuilly-sur-Seine நகரில் உள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கொள்ளை சம்பவத்தின் போது அவர் வீட்டில் இருக்கவில்லை எனவும், வீட்டில் இருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன. அதன் மொத்த மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை  Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்