பிரபல நடிகை மர்ம மரணம் ..
2 மார்கழி 2024 திங்கள் 13:16 | பார்வைகள் : 5563
பிரபல நடிகைக்கு திருமணமாகி இரண்டு வருடங்களே ஆகும் நிலையில், அவர் மர்மமான முறையில் மரணமடைந்ததாக வெளிவந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட பிரபல நடிகை சோபிதா சிவன்னா கர்நாடக மாநிலம் ஹாசன் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கன்னட திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 30 வயதான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், அவர் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு சோபிதா சிவன்னா மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நடிகை சோபிதா சிவன்னா இறந்த செய்தி, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan