Périphérique இனைத் தொடர்ந்து A86 , A4 நெடுஞ்சாலைகளில் வேகக்கட்டுப்பாடு!!

26 ஐப்பசி 2024 சனி 11:00 | பார்வைகள் : 8059
சுற்றுவட்ட வீதி என அழைக்கப்படும் Périphérique இன் வேகம் மணிக்கு 50 கி.மி ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தற்போது A86 மற்றும் A4 நெடுஞ்சாலைகளின் வேகமும் மட்டுப்படுத்தப்பட உள்ளது.
தற்போது அதிகபட்ச வேகமாக மணிக்கு 90 கி.மீ வேகம் உள்ள நிலையில், விரைவில் அதன் வேகம் 70 கி.மீ ஆக குறைக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் மாசடைவு மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
A86 சாலை Saint-Denis தொடக்கம் La Courneuve வரையும், A4 நெடுஞ்சாலை Charenton தொடக்கம் Saint-Maurice வரையும் இது நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த வேகக்கட்டுப்பாட்டினால் 40% சதவீத ‘ஒலி மாசடைவை’ தடுக்க முடியும் எனவும், 64% சதவீதமான மக்கள் இதற்கு அதரவு தெரிவித்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1