Emerging T20 Asia Cup - பாகிஸ்தானை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி

25 ஐப்பசி 2024 வெள்ளி 15:08 | பார்வைகள் : 5900
Emerging ஆசியக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் ஏ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க வீரர் ஓமைர் யூசுப் 46 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார்.
இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய துஷன் ஹேமந்தா 4 விக்கெட்டுகளும், நிபுன் ரன்சிகா மற்றும் இஷான் மலிங்கா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 16.3 ஓவரில் 137 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அஹான் விக்ரமசிங்கே 46 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களும், லஹிரு உதார 20 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1