வார இறுதியில் - RER B, D - Transilien K & H சேவைகள் பாதிப்பு!!
24 ஐப்பசி 2024 வியாழன் 09:40 | பார்வைகள் : 18989
Saint-Denis தொடருந்து மேம்பாலம் ஒன்று திருத்தப்பணிகளுக்கு உட்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த வார இறுதியில் RER B உள்ளிட்ட சில சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
ஒக்டோபர் 25, நாளை வெள்ளிக்கிழமை முதல் ஒக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை வரை சில சேவைகள் தடைப்பட்டும், சில சேவைகள் தாமதமாகவும், சில சேவைகள் குறைக்கப்படவும் உள்ளன. RER B மற்றும் D சேவைகளும், Transilien K மற்றும் H சேவைகளும், TER சேவையும் பாதிக்கப்பட உள்ளன. 
குறிப்பாக வடக்கு நோக்கிச் செல்லும் RER B ஒரு மணிநேரத்துக்கு ஒன்பது சேவைகள் மட்டுமே இயங்கும்.
RER D சேவைகளில் 50% சதவீதமானவை மட்டுமே இயக்கப்படும்.
பரிஸ் முதல் Beauvais வரையான TER சேவையும் பாதிக்கப்பட உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan