Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சிம்பு உடன் முதன்முறையாக இணையும் அனிருத் ..?

சிம்பு உடன் முதன்முறையாக இணையும் அனிருத் ..?

23 ஐப்பசி 2024 புதன் 02:41 | பார்வைகள் : 10518


தமிழ் சினிமாவில் வலம் வரும் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தில் சிம்பு உடன் கமல்ஹாசன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சிம்பு கைவசம் எஸ்.டி.ஆர்.48 திரைப்படமும் உள்ளது. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

எஸ்.டி.ஆர் 48 படத்துக்கு முன்னதாகவே எஸ்.டி.ஆர் 49 படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியவர் ஆவார். அஸ்வத் மாரிமுத்து - சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை விஜய்யின் கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும் எஸ்.டி.ஆர் 49 படத்தில் விண்டேஜ் சிம்புவை பார்க்கலாம் என்றும் கூறி உள்ளதால் இப்படம் சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது. விண்டேஜ் சிம்புவுக்கு பல வெற்றிப்பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். ஆனால் எஸ்.டி.ஆர் 49 படத்துக்கு யுவனை டீலில் விட முடிவெடுத்துள்ள சிம்பு, முதன்முறையாக அனிருத் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளிவந்த பீப் சாங் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வில்லங்க கூட்டணி மீண்டும் இணைவதால் என்ன சம்பவம் பண்ண போகிறார்களோ என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்