Paristamil Navigation Paristamil advert login

Yvelines : வகுப்பறையில் வைத்து ஆசிரியர் மீது தாக்குதல்..!!

Yvelines : வகுப்பறையில் வைத்து ஆசிரியர் மீது தாக்குதல்..!!

22 ஐப்பசி 2024 செவ்வாய் 16:52 | பார்வைகள் : 5043


Yvelines மாவட்டத்தில் உள்ள நடுத்தர கல்வி பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். Maurepas  நகரில் உள்ள collège Alexandre-Dumas பாடசாலையில் இச்சம்பவம் ஒக்டோபர் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாணவன் ஒருவரது மோசமாக நடத்தை காரணமாக ஆசிரியர் ஒருவர் மாணவனைத் தண்டித்துள்ளார். அதை அடுத்து குறித்த மாணவன் ஆசிரியரை தள்ளி சுவற்றுடன் சாய்த்து கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் தலையிலும் தாக்கியுள்ளார்.

பின்னர் பாடசாலை நிர்வாகத்தினர் தலையிட்டு குறித்த மாணவனை நன்நடத்தை வகுப்புக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குறித்த மாணவன் மீது வழக்கு தொடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்