Ardèche : வெள்ளத்தினால் மேலும் ஒருவர் பலி!!

21 ஐப்பசி 2024 திங்கள் 07:13 | பார்வைகள் : 6080
இயற்கை அனர்த்தம் காரணமாக பரிசில் கடந்தவாரம் ஒருவர் மரணித்திருந்த நிலையில், தற்போது 58 வயதுடைய பெண்மணி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது.
பிரான்சின் தென் கிழக்கு மாவட்டமான Ardèche இல் இச்சம்பவம் நேற்று ஒக்டோபர் 20, ஞாயிற்றுக்கிழமை பதிவானது. அங்குள்ள Burzet எனும் சிறு நகர்ப்பகுதி கடந்தவாரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. வீதி போக்குவரத்துக்கள் முடங்கியிருந்தன. இந்நிலையில், இந்த வெள்ளம் ஏற்படுத்திய குழி ஒன்றில் விழுந்த 58 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அந்த குழி Bourges ஆற்றைச் சென்றடைவதாகவும், 400 மீற்றர் தூரம் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு படையினரால் அவரை மீட்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025