87 வயதில் பட்டம் பெற்ற ஒன்றாரியோ பெண்... குவியும் பாராட்டுக்கள்
20 ஐப்பசி 2024 ஞாயிறு 13:29 | பார்வைகள் : 5116
தனது 87 ஆம் வயதில் பட்ட கற்கை நெறியை பூர்த்தி செய்து பட்டத்தை பெற்றுக் மூதாட்டிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
யோர்க் பல்கலைக்கழகத்தில் இந்த பெண் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார் ஹோர்டன்ஸ் எக்லின் என்ற பெண்ணே இவ்வாறு பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.
யோர்க் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இந்த வாரம் நடைபெற்றது. சமய விவகார கற்களுக்காக சிறப்பு பட்டத்தை பெற்றுக் கொண்டதாக எக்லின் தெரிவிக்கின்றார்.
தமது இந்த அடைவிற்காக பலரும் வாழ்த்தியதாகவும் தான் இந்த பட்டத்தையே வென்றெடுத்தமைக்காக பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆண்டு எக்லின் ஏற்கனவே கலைத்துறையில் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார் என்பதுடன் அப்பொழுது அவருக்கு வயது 85 என்பது குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan