முதல் பந்திலேயே கிளீன்போல்டு- மே.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வனிந்து ஹசரங்கா

20 ஐப்பசி 2024 ஞாயிறு 13:24 | பார்வைகள் : 4774
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெர்பானே ரூதர்போர்டு அரைசதம் விளாசினார்.
பல்லேகேலேவில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. பிரண்டன் கிங், அலிக் அதனசி கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 34 ஓட்டங்கள் எடுத்தது.
அப்போது வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) 8வது ஓவரை வீசினார். முதல் பந்திலேயே பிரண்டன் கிங் கிளீன் போல்டு ஆனார்.
அவர் 14 ஓட்டங்களில் வெளியேற, 10வது ஓவரை மீண்டும் ஹசரங்கா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே அலிக் அதனசி (Alick Athanaze) 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஷாய் ஹோப் (5) அவுட் ஆகி வெளியேற, ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) மற்றும் ரஸ்டன் சேஸ் (Roston Chase) கூட்டணி அமைத்தனர்.
நங்கூரம்போல் நின்று ஆடிய ரூதர்போர்டு தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 185/4 (38.3) ஆக உயர்ந்தபோது மழைகுறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது. ரூதர்போர்டு 74 (82) ஓட்டங்களுடனும், சேஸ் 33 (33) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025