907வது கோல் அடித்த ரொனால்டோ..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
19 ஐப்பசி 2024 சனி 10:29 | பார்வைகள் : 6201
அல் ஷபாப் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சவுதி ப்ரோ லீக் தொடரின் ஆட்டத்தில் அல் நஸர் (Al-Nassr) மற்றும் அல் ஷபாப் (Al-Shabab) அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் அல் நஸர் வீரர் ஐமெரிக் லபோர்டே கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அல் நஸரின் அலி அல் ஹசன் Own கோல் அடிக்க, அல் ஷபாப் அணிக்கு 90வது நிமிடத்தில் கோல் கிடைத்தது.
பின்னர் 90+7 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கோலாக மாற்றினார்.
மேலும், அல் நஸர் வீரர் முகமது சிமகான் (90+12) கோல் அடிக்க 1-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணி தோல்வியுற்றது.
உலகக் கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரொனால்டோ தனது 907வது கேரியர் கோலை அடித்ததை ரசிகர் கொண்டாடி வருகின்றனர்.
அத்துடன் ரொனால்டோ வெளியிட்ட தனது பதிவில் "நாங்கள் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என குறிப்பிட்டுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan