கனடாவில் விசித்திரமான முறையில் கொள்ளைச் சம்பவம்
17 ஐப்பசி 2024 வியாழன் 14:49 | பார்வைகள் : 7565
கனடாவில் விசித்திரமான முறையில் கொள்ளை சம்பவம் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் குயில்ப் பகுதியில் பேய் போன்று வேடம் தரித்து கொள்ளைச் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்தி முனையில் இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்தி முனையில் வர்த்தக நிறுவனத்தின் காசாளரை அச்சுறுத்தி கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஒருவர் பேய் போன்றும் மற்றையவர் அருட்சகோதரி போன்றும் வேடமிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர் என காணொளிகள் மூலம் தெரியவந்துள்ளது.
முதலில் இது ஓர் குறும்பு செயல் என தாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனவும் பின்னர் இருவரும் கொள்ளையிட வந்தவர்கள் என்பதனை புரிந்து கொண்டதாகவும் நிறுவனத்தின் காசாளர் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan