Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க தயாராகும் அமெரிக்கா 

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க தயாராகும் அமெரிக்கா 

17 ஐப்பசி 2024 வியாழன் 14:35 | பார்வைகள் : 11695


ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் உக்ரேனுக்கு 425 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உக்ரேனுக்கு போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ஆயுத உதவிக்கு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் தனது பதவி காலத்தில் கடைசியாக, போர் நிலவரம் குறித்து உக்ரேனுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும் ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஏற்கனவே உக்ரேன் வெற்றி பெறும் வரை அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஜனாதிபதி பைடனும், துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் வழங்குவார்கள் என வெள்ளை மாளிகை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்