நல்ல செய்தி சொன்ன ஹன்சிகா..

17 ஐப்பசி 2024 வியாழன் 07:38 | பார்வைகள் : 4929
நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் அவர் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக இருந்தவர் ஹன்சிகா என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது கூட "ரவுடி பேபி," "காந்தாரி," "கார்டியன்" உட்பட ஆறு படங்களில் நடித்து பிஸியாக உள்ளார்.
இந்நிலையில், ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹேல் கட்டாரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சுமார் 7 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்டுள்ள ஹன்சிகா, தனது புதிய வீட்டில் குடியேறிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கணவருடன் புதிய வீட்டிற்குள் நுழைவது மற்றும் யாகம் நடத்தும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். "விரைவில் இன்னொரு நல்ல செய்தியையும் சொல்லுங்கள்" என்று பலர் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025