Paristamil Navigation Paristamil advert login

அதிரடி முடிவெடுத்த பாடகி சுசித்ரா..!

அதிரடி முடிவெடுத்த பாடகி சுசித்ரா..!

16 ஐப்பசி 2024 புதன் 10:19 | பார்வைகள் : 6184


பாடகி சுசித்ரா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை வெளியிட்டும் YouTube சேனல்களில் பேட்டி அளித்தும் வந்த நிலையில் தற்போது மும்பையில் செட்டில் ஆகப் போவதாகவும் இனி பேட்டி, வீடியோ இருக்காது என்றும் தனது கனவு பணியில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடிய சுசித்ரா திடீரென கடந்த சில வருடங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பின்னர் சமீபத்தில் கூட மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையின் போது பல வீடியோக்களை வெளியிட்டார் என்பதும், முன்னணி நடிகர்கள் உட்பட பலர் மீது சில குற்றச்சாட்டுகளை அவ்வப்போது வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பையில் குழந்தைகளுக்கான ஊடகம் ஒன்றில் பணிபுரிய இருப்பதாகவும், இது தன்னுடைய கனவு பணி என்றும் இதனால் மும்பையில் செட்டில் ஆகப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இனிமேல் பேட்டி, வீடியோ இருக்காது என்றும் தனது பணியில் முழுமையாக கவனம் செலுத்தப் போவதாகவும் பாடகி சுசித்ரா கூறிய நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்