Paristamil Navigation Paristamil advert login

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்! கம்ரான் குலாம் படைத்த சாதனை

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்! கம்ரான் குலாம் படைத்த சாதனை

16 ஐப்பசி 2024 புதன் 09:16 | பார்வைகள் : 5063


பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசிய 13வது வீரர் என்ற பெருமையை கம்ரான் குலாம் படைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாளான இன்று 90 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு முதல் முறையாக களமிறங்கிய கம்ரான் குலாம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.

இதன் மூலம் கம்ரான் குலாம் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசிய 13வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது முகமது ரிஸ்வான் 37 ஓட்டங்களுடனும் மற்றும் ஆகா சல்மான் 5 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் ஜேக் லீச் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்