Paristamil Navigation Paristamil advert login

லெபனானில் இஸ்ரேலின்  வான்வழித் தாக்குதல் - 21 பேர் பலி

லெபனானில் இஸ்ரேலின்  வான்வழித் தாக்குதல் - 21 பேர் பலி

15 ஐப்பசி 2024 செவ்வாய் 08:53 | பார்வைகள் : 8757


வடக்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் மேலும் 8 பேர் வரை காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹெஸ்புல்லா இயக்கத்தினரை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர்ந்து வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

வடக்கு லெபனானில் உள்ள ஐட்டோ எனும் சிறிய கிராமத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

போர் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களும் இந்த கிராமத்தில் வசித்துவந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் உடனடியாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் அனைத்துப் பகுதிகளிலும் இரக்கமின்றி ஹெஸ்புல்லாவைத் தொடர்ந்து தாக்குவோம் என தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்