Brétigny-sur-Orge : SNCF நிறுவனத்துக்குச் சொந்தமான பொருட்கள் திருட்டு.. !!

15 ஐப்பசி 2024 செவ்வாய் 07:34 | பார்வைகள் : 13838
SNCF தொடருந்து நிறுவனத்துக்குச் சொந்தமான கம்பிகள் மற்றும் கேபிள்கள் திருடப்பட்டுள்ளன. Brétigny-sur-Orge (Essonne) நகரில் உள்ள SNCF அலுவலகத்தில் இத்திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் ஒக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கட்டிட வளாகம் உடைக்கப்பட்டிருப்பதை நேற்று திங்கட்கிழமை காலை அதிகாரிகள் பார்வையிட்டு, காவல்துறையினரை அழைத்தனர். அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த புதிய செப்பு கம்பிகள், கேபிள் கம்பிகள் என மொத்தமாக 13 சுருள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அதன் மொத்த மதிப்பு 120,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1