Cergy : தொடருந்து நிலையம் அருகே தீப்பிடித்து எரிந்த மகிழுந்தினால் பரபரப்பு!
14 ஐப்பசி 2024 திங்கள் 15:31 | பார்வைகள் : 1455
RER தொடருந்து நிலையம் ஒன்றின் அருகே மகிழுந்து ஒன்று தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cergy (Val-d'Oise) நகரில் இச்சம்பவம் இன்று ஒக்டோபர் 14, திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. Rue de l'Embarquement வீதியில்உள்ள Cergy Le Haut நிலையத்துக்கு அருகே உள்ள வாகனத்தரிப்பிடம் ஒன்றில் நின்றிருந்த மகிழுந்து ஒன்றே தீப்பிடித்து எரிந்துள்ளது.
நிலகீழ் வாகன தரிப்பிடத்தில் திடீரென மகிழுந்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 51 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பெரும் போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. நிலகீழ் தரிப்பிடம் என்பதால் அப்பகுதி முழுவதும் புகை பரவி பதட்டத்தை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கோரப்பட்டுள்ளது.