வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
14 ஐப்பசி 2024 திங்கள் 04:26 | பார்வைகள் : 5516
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த <b>காற்றழுத்த தாழ்வுப்பகுதி</b> உருவாகியுள்ளது.
இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புதுசேரி, வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையில் அடுத்த 2 நாட்கள் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 115.5 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 204.4 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாளை மறுதினம் சென்னையில் அதிகனமழைக்கான சிகப்பு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
17ம் தேதி வரை சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள வடதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan