Paristamil Navigation Paristamil advert login

லண்டன் டூ நியூயார்க் 60 நிமிடங்களில் பறக்கும் ஹைப்பர்சோனிக் ஜெட்..!

லண்டன் டூ நியூயார்க் 60 நிமிடங்களில் பறக்கும் ஹைப்பர்சோனிக் ஜெட்..!

13 ஐப்பசி 2024 ஞாயிறு 11:04 | பார்வைகள் : 7078


ஒலியின் வேகத்தை தாண்டிய வேகத்தில் பயணிக்கும் 'ஹைப்பர்சோனிக் ஜெட்' விமானத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பம் ஒரு படி முன்னேறியுள்ளது.

அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் இன்ஜினியரிங் நிறுவனமான வீனஸ் ஏரோஸ்பேஸ் (Venus Aerospace) உருவாக்கியுள்ள 'ஹைப்பர்சோனிக் ஜெட்' சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.

வீனஸ் ஏரோஸ்பேஸ் 2025-ஆம் ஆண்டில் இந்த விமானத்தின் சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதிக வேகத்தில் (மணிக்கு 1,235 கி.மீ.) பறப்பது இந்த விமானத்தின் சிறப்பு.


அதாவது, இந்த விமானத்தில் நியூயார்க்கில் இருந்து லண்டன் செல்ல 60 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.


ஹைப்பர்சோனிக் ஜெட் விமானங்கள் வழக்கமான விமானங்களை விட உயரமாக பறக்கக்கூடியவை. அவை விண்வெளியின் விளிம்பை அடைகின்றன. பயணிகள் கூட மிகவும் சிலிர்ப்பான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்