இலங்கையில் பிரதமரின் படங்களை பயன்படுத்த முன் அனுமதி தேவை

12 ஐப்பசி 2024 சனி 13:49 | பார்வைகள் : 4646
அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இது தொடர்பில் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பார்வைக்கு இணங்க, பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதமரின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்தும் போது, பிரதமர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும்.
அத்துடன், அமைச்சர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் எனவும் பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025