இலங்கையில் வெள்ள அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

12 ஐப்பசி 2024 சனி 10:18 | பார்வைகள் : 4743
சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில், களனி கங்கையை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் களுகங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் அதனை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025