Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது குழு இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது குழு இலங்கை விஜயம்

17 கார்த்திகை 2024 ஞாயிறு 16:32 | பார்வைகள் : 3947


இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று நவம்பர் 17 முதல் 23 வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளது.

IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை  இக்குழு நடாத்தவுள்ளதாக, IMF பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதையும் நாடு எதிர்நோக்கும் நிதி சவால்களை எதிர்கொள்வதையும் இலக்காகக் கொண்ட சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதில் இந்த மீளாய்வு ஒரு முக்கியமான படியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதித் திட்டம் இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சிகளை எளிதாக்குவதற்கு தேவையான நிதி உதவி மற்றும் கொள்கை வழிகாட்டல்களை வழங்குகிறது

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்