Paristamil Navigation Paristamil advert login

Landy சுரங்கத்துக்குள் தீ விபத்து.. இருவர் காயம்!!

Landy சுரங்கத்துக்குள் தீ விபத்து.. இருவர் காயம்!!

17 கார்த்திகை 2024 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 5041


Landy சுரங்கத்துக்குள் (tunnel du Landy) பயணித்த வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.

நவம்பர் 16, சனிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொதி ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதையடுத்து அங்கு போக்குவரத்து தடைப்பட்டது. சுரங்கம் முழுவதும் கரும்புகை படர்ந்தது. இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சுரங்கத்துக்குள் அமைக்கப்பட்ட தீயணைப்பு கருவி இயக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

வாகனம் தீப்பிடித்தமைக்குரிய காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்