பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனை வீழ்த்தி ஜேக் பால் அபார வெற்றி!

17 கார்த்திகை 2024 ஞாயிறு 06:58 | பார்வைகள் : 3628
பாக்சிங் சூப்பர் ஸ்டார் மைக் டைசனை வீழ்த்தி YouTube பிரபலம் ஜேக் பால் குத்துச்சண்டை போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
பிரபல ஹெவிவெயிட் சாம்பியனான 58 வயது மைக் டைசனை(Mike Tyson) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் 27 வயதான பிரபல யூடியூப் பிரபலம் ஜேக் பால்(Jake Paul) வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.
டெக்சாஸின் ஆர்லிங்டனில் உள்ள AT&T மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜேக் பால் வெற்றி பெற்றுள்ளார்.
போட்டிக்கு முன்னதாக நடந்த அறிமுக விழாவில் YouTube நட்சத்திரம் ஜேக் பாலை, நாக்-அவுட் செய்வதில் பிரபலமான மைக் டைசன் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலானது.
இந்த போட்டியில் மைக் டைசனை 73-79 என்ற புள்ளிகளில் ஜேக் பால் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
போட்டிக்கு பிறகு இரண்டு போராளிகளும் ஒருவருக்கொருவர் மரியாதை தெரிவித்து கொண்டனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025