ஜெயம் ரவி விவாகரத்து விவகாரத்தில் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!
15 கார்த்திகை 2024 வெள்ளி 11:30 | பார்வைகள் : 4637
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியைக் காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன் என ஜெயம் ரவி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விவாகரத்து கோரி ஜெயம் ரவி வழக்கு தொடர்ந்தார். அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில் ஜெயம் ரவி எடுத்த முடிவு தனது கவனத்திற்கு வரவில்லை. அவரை சந்திக்க முயற்சித்தும் முடியாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே அவர்களது விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் இன்றே குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையில் ஜெயம் ரவி நேரிலும், ஆர்த்தி காணொலி மூலமும் ஆஜரானார்கள். சமரச தீர்வு மையத்தில் இருவரும் நேரில் ஆஜராவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan