மின்னணு விசா அறிமுகம் திட்டத்தை மேற்கொள்ளும் பிரித்தானியா

15 கார்த்திகை 2024 வெள்ளி 10:57 | பார்வைகள் : 3877
பிரித்தானியா 2025-ல் digital by default குடிவரவு முறைமையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் eVisa (மின்னணு விசா) நடைமுறையில் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு மற்றும் வசதியை ஏற்படுத்தவுள்ளது.
இதனால், விசா முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகு உடனே பத்திரங்களைத் திரும்ப பெறும் அல்லது காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க உதவும்.
கோவிட் தொற்றுக்குப் பின்னர் இந்தியர்களுக்குக் கிடைக்கும் விசாக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதைக் கவனிக்க முடிகிறது.
இது குறித்து தகவல் வெளியிட்ட பிரித்தானிய உயர் அதிகாரி லிண்டி கேமரன், 2024 ஜூன் மாத முடிவில், இந்தியர்கள் தான் அதிகளவில் பிரித்தானியாவின் பயணம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு விசாக்களைப் பெற்றவர்களாக உள்ளனர் என்று கூறினார்.
இந்தியாவில் விசா செயல்முறை நேரத்தை வேகமாக முடிக்கவும், 6 மாதக் கால விசா கட்டணமாக ரூ.13,308 முதல் 10 ஆண்டு கால விசா ரூ.1.1 லட்சம் வரை தொடங்கி, விரைவுப் பயன்பாட்டிற்கு கூடுதல் 500 பவுண்டுகள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், பிரித்தானியாவின் விசா விண்ணப்ப மையங்களில் (VFS) முதல் முறையாக பயோமெட்ரிக்ஸ் சேகரிக்கப்பட்டு, பிறகு டிஜிட்டல் சேவை முறையில் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்படும்.
2025க்குள் முழுமையான டிஜிட்டல் குடியேற்ற முறைமையை கொண்டு வருவது, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.