துபாயின் விளையாட்டு தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் நியமனம்
15 கார்த்திகை 2024 வெள்ளி 08:10 | பார்வைகள் : 4067
துபாய் விளையாட்டு கவுன்சில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை (Harbhajan Singh) துபாய் விளையாட்டு தூதராக நியமித்துள்ளது.
இந்த அறிவிப்பு துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் முன்னிலையில் செய்யப்பட்டது.
நிகழ்வில் UFC ஜாம்பவான் கபீப் நூர்மகோமேடோவ் (Khabib Nurmagomedov), டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (Sania Mirza), மற்றும் கால்பந்து நட்சத்திரம் பட்ரிச் எவ்ரா (Patrice Evra) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த புதிய பொறுப்பில் ஹர்பஜன் சிங், துபாயின் விளையாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளார்.
அவர், உலக தரமான விளையாட்டு அடிப்படைகளை உருவாக்கி, இந்நகரில் முக்கிய போட்டிகளை நடத்தியலும், உள்ளூர் திறமைகளை ஊக்குவித்தலும் உதவுவார்.
துபாயின் உலகளவிலான விளையாட்டு மையமாக உருவெடுக்கும் இலக்கை வலுப்படுத்த இந்த நியமனம் முக்கியமாக கருதப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan