நயன்தாராவின் வெற்றி ரகசியம் இதுவா?
14 கார்த்திகை 2024 வியாழன் 13:35 | பார்வைகள் : 4592
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார்.அந்த வகையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அடுத்தது இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி, டாக்ஸிக், டியர் ஸ்டுடென்ட்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அடுத்தது இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வருகிறார். அதன்படி ஃபெமி நைன் என்ற நாப்கின் நிறுவனத்தையும் 9 ஸ்கின் என்ற ஸ்கின் கேர் நிறுவனத்தையும் தொடங்கி வெற்றி பெற்று வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நயன்தாரா.
அதன்படி நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அதில் ஒரு புகைப்படத்தில் நயன்தாரா கையில் உத்ரபோதி முத்திரையை செய்தவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த முத்திரையானது புத்த மதப்படி உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் ஞாபக சக்தியை அதிகரிப்பதாகவும் மன அமைதியை தருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த முத்ரா நயன்தாராவின் வெற்றி ரகசியமாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan