பாகிஸ்தானில் கோர விபத்து- 14 பேர் பலி

14 கார்த்திகை 2024 வியாழன் 09:43 | பார்வைகள் : 4443
பாகிஸ்தானில் திருமண விழாவுக்கு விருந்தினர்களை ஏந்திச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது ஆற்றுக்குள் விழுந்ததால் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மணமகள் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்தில் 25 பேர் இருந்த நிலையில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 10 பேரைக் காணவில்லை என்று மீட்புப்படை ஊழியர் தெரிவித்தார்.
மணமகளின் உயிருக்கு ஆபத்து இல்லை; அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து ஓட்டுநர் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மணமகனின் குடும்பம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வடக்கே 500 கிலோமீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்த நிலையில் அவர்கள் வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பிரான்சு, தொண்டைமண்டலம்
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1