பா-து-கலே : மீண்டும் இரு சடலங்கள் மீட்பு..!!

13 கார்த்திகை 2024 புதன் 18:07 | பார்வைகள் : 7144
கடந்த வாரத்தில் பா-து-கலே கடலில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இந்தவாரம் மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பா-து-கலே மாவட்டத்தின் Wissant நகர கடற்கரையில் ஒரு சடலமும், Sangatte நகர கடற்கரையில் இருந்து ஒரு சடலமும் நேற்று நவம்பர் 12, செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன..
குறித்த இரு சடலங்களும் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும், அவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 23 பிரித்தானியா நோக்கி பயணித்த படகில் பயணித்து பலியானவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த பயணத்தின் போது மூவர் உயிரிழந்ததாகவும், பலர் கடலில் மூழ்கி காணாம போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவரது சடலங்களே தற்போது கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025